Home உலகம் நேபாளத்திற்கான விமான சேவைகளை ஆரம்பித்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ்

நேபாளத்திற்கான விமான சேவைகளை ஆரம்பித்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ்

0

நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழுவினால், காத்மண்டு சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (Srilankan Airlines) இன்று (11) விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து காத்மண்டுக்கு யூ.எல்-181 என்ற விமானம் புறப்பட்டதன் மூலம் நேபாளத்திற்கு மீண்டும் சேவைகளை ஆரம்பித்துள்ளது.

நேபாளத்தில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக விமான நிலையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, விமான சேவைகளை நேற்று (10) நிறுத்தப்பட்டதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்பு முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்

காத்மண்டுக்கு பயணிக்க எதிர்பார்த்து நேற்று வந்த 35ற்கும் அதிகமான பயணிகளுக்கு தங்குமிடம் மற்றும் ஹோட்டல் வசதிகளை விமான நிறுவனம் வழங்கியதாக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட விமான சேவை இன்று காலை 8.15 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 11.41 மணிக்கு காத்மண்டுவில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.

காத்மண்டுவிலிருந்து திரும்பும் விமானம் மாலை 4.40 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்புக்கும் காத்மண்டுவுக்கும் இடையில் விமானங்களை இயக்கும் ஒரே விமான நிறுவனமான சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானசேவை வாரத்தில் நான்கு நாட்களுக்கு இயங்கும்.

அதன்படி, ஞாயிறு, திங்கள், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் குறித்த விமானசேவை இடம்பெறும் என சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்பு முகாமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version