Home இலங்கை அரசியல் பொதுத் தேர்தலில் சங்கு சின்னத்தில் களமிறங்குவோம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உறுதி

பொதுத் தேர்தலில் சங்கு சின்னத்தில் களமிறங்குவோம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உறுதி

0

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக குத்து விளக்குக்கு பதிலாக சங்கு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் (batticaloa) உள்ள அவரது அலுவலகத்தில் இன்று(30) காலை நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியத்தின் மீது பற்று

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட இளைஞர்களை இணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

அதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் அழைப்பு தொடர்பில் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய குழு தீர்மானம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) மத்திய குழு தீர்மானம் தொடர்பான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா (Nallathamby Srikantha) தெரிவித்துள்ளார்.

யாழில் (jaffna) உள்ள தனியார் விடுதியில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் பொருட்டு அம்பாறை மற்றும் திருகோணமலையில் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் இணைந்து போட்டியிட முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணையுமாறு தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version