Home முக்கியச் செய்திகள் ஊழல் கொண்ட அதிபரை வெளியேற்றுங்கள் : ஆர்பாட்டத்தில் குதித்த மலையக மக்கள்

ஊழல் கொண்ட அதிபரை வெளியேற்றுங்கள் : ஆர்பாட்டத்தில் குதித்த மலையக மக்கள்

0

ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட நோர்வூட் சென்ஜோன் டிலரி தமிழ்
வித்தியாலயத்திற்கு ஊழல் கொண்ட அதிபரை வெளியேற்றி முறையான ஊழல் அற்ற ஒரு
அதிபரை நியமிக்குமாறு வழியுருத்தி சென்ஜோன் டிலரி தமிழ் வித்தியாலயத்திற்கு
அருகாமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (14) செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிமுதல் 9.30 மணிவரை இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் 300 இற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டதுடன் இந்த ஆர்ப்பாட்டத்தின் ஊடாக பெற்றோர்கள் அரியதருவது நோர்வூட் சென்ஜோன் டிலரி தமிழ் வித்தியாலயத்தில் கடமையில் ஈடுபட்டு வந்த அதிபர் கடந்த வாரம் ஒய்வு பெற்றுள்ள நிலையில் ஹட்டன் வலையகல்வி பணிமனை வரதராஜன் என்ற ஒரு அதிபரை நியமித்துள்ளது.  

பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

தற்போது வலையகல்வி பணிப்பாளர் ஆர். விஜேந்திரனினால் நிமிக்கப்பட்ட அதிபர் இதற்கு முன்னர் அவர் கடமை புரிந்த பாடசாலைகளில் பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர் ஆகையால் தான் நாங்கள் கூறுகிறோம் இந்த அதிபர் எமது பாடசாலைக்கு வேண்டாம் என வழியுருத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

அத்தோடு, பாடசாலைக்கு முறையான ஒழுக்கமுல்ல அதிபரை எமது பாடசாலைக்கு நியமிக்குமாறு கோரிக்கை விடுத்ததோடு முறையான அதிபர் ஒருவர் எமது பாடசாலைக்கு நியமிக்கபடாவிட்டால் எமது போராட்டம் பாரிய ஒரு போராட்டமாக உருவெடுக்குமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் வலையகல்வி பணிப்பாளருக்கு எச்சரித்துள்ளனர்.

பணிமனையின் பணிப்பாளர்

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஹட்டன் வலையகல்வி பணிமனையின் பணிப்பாளர் ஆர். விஜேந்திரனை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது பயனிக்கவில்லை.

அத்தோடு, இந்த சம்பவம்
தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமாரிடம் தொடர்பு
கொண்டு வினவிய போது நோர்வூட் சென்ஜோன் டிலரி தமிழ் வித்தியாலயத்தின் அதிபர்
விவகாரம் தொடர்பாக தொலைபேசி மூலம் தமக்கு பெற்றோர்கள் முறைப்பாடு ஒன்றை
முன்வைத்ததாகவும் பாடசாலையின் மாணவர்களின் எதிர்காலம் குறித்துஜ உடனடியாக
விசாரனை ஒன்றை ஆரம்பித்து கல்வி அமைச்சிக்கு அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு
மத்திய மாகாண கல்வி தினைக்களத்தின் செயலாளருக்கு பணிப்புறை விடுத்துள்ளதாக
அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version