Home இலங்கை அரசியல் விரைவில் சிக்கவுள்ள நாமல் ராஜபக்ச : சிஐடிக்கு செல்லவுள்ள பிரபல தொழிலதிபர்

விரைவில் சிக்கவுள்ள நாமல் ராஜபக்ச : சிஐடிக்கு செல்லவுள்ள பிரபல தொழிலதிபர்

0

நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவருக்கு நெருக்கமானவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தொழிலதிபர் ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிக்க உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் சம்பந்தப்பட்ட ஒரு பரிவர்த்தனை தொடர்பாக ஆதாரங்கள் வழங்க குறித்த நபர் வாக்குமூலம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த வாரம் குறித்த நபர் வாக்குமூலம் அளித்தவுடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கைகள் 

அத்தோடு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) மகனான யோஷித ராஜபக்ச (Yoshitha Rajapaksa) கடந்த மூன்றாம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள அரச காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன், அந்த காணி தொடர்பில் மகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியான நெவில் வன்னியாராச்சி (Nevil Wanniarachchi) கடந்த மாதம் (27) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version