Home இலங்கை குற்றம் வெள்ளை வானில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவன்

வெள்ளை வானில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவன்

0

பிலியந்தலை- தேசிய பாடசாலையில் கல்விகற்கும் மாணவனொருவன் வெள்ளை வானில் வந்த ஒரு குழுவினரால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தரம் 11 இல் கற்கும் மாணவன், நேற்று (16) மாலை 4.00 மணியளவில் மேலதிக வகுப்புக்கு செல்வதற்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பதினைந்து வயது மாணவன்

மேலும், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பதினைந்து வயது மாணவன் இரத்தினபுரி பகுதியில் வெள்ளை வேனில் இருந்து குதித்து தப்பிச் சென்றுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹதுடுவ பொலிஸார் வானையும் சிறுவனை கடத்தியதாகக் கூறப்படும் நபர்களையும் கைது செய்வதற்காக விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version