Home இந்தியா மற்றுமொரு ஏவுகணை சோதனை வெற்றி : தொடர் சாதனையில் இந்தியா

மற்றுமொரு ஏவுகணை சோதனை வெற்றி : தொடர் சாதனையில் இந்தியா

0

டார்பிடோ எனும் ஏவுகணை அமைப்பை இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நேற்று(01) வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) இந்திய படையினருக்கு தேவையான ஏவுகணைகளை தயாரித்து வருகின்றது. அவை பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு படைக்கட்டமைப்பில் சேர்க்கப்படுகின்றன.

அதிபர் தேர்தல் : கருத்துக் கணிப்பில் முந்திய சஜித்

வெற்றிகரமாக பரிசோதனை

இந்த நிலையில் டார்பிடோ (ஸ்மார்ட்) என்கிற ஏவுகணை அமைப்பை இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

ஒடிசா கடற்கரையில் உள்ள டொக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

நடப்பு ஐ பி எல் தொடரில் முதன்முறையாக ஆட்டமிழந்த தோனி

சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன்

சூப்பர்சோனிக் ஏவுகணையின் உதவியுடன் ஸ்மார்ட் ஏவுகணை அமைப்பு பரிசோதிக்கப்பட்டதாகவும், இந்த சோதனையில் ஏவுகணை அமைப்பின் வேகக் கட்டுப்பாடு உள்பட பல அதிநவீன வழிமுறைகள் சரிபார்க்கப்பட்டதாகவும் இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version