Home இந்தியா சிறையிலிருந்து காதலர் தினமன்று இலங்கை காதலிக்கு ஜெட் விமானத்தை பரிசளித்த காதலர்

சிறையிலிருந்து காதலர் தினமன்று இலங்கை காதலிக்கு ஜெட் விமானத்தை பரிசளித்த காதலர்

0

இந்தியாவின்(india) பிரபல நிதி மோசடி குற்றவாளி சுகேஷ் சந்திரசேகர்(Sukesh Chandrasekhar), இலங்கையைச்(sri lanka) சேர்ந்த பொலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு(acqueline Fernandez) காதலர் தினத்தன்று ஒரு தனியார் ஜெட் விமானத்தை பரிசாக அளித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சுகேஷின் நிதி மோசடி வழக்கிலும் காதலியான ஜாக்குலின் பிரதிவாதியாக உள்ளார்.

சிறையில் இருந்து அவ்வப்போது காதல் கடிதங்கள்

சிறையில் இருந்து அவ்வப்போது ஜாக்குலினுக்கு காதல் கடிதங்களை அனுப்பும் சுகேஷ், காதலர் தினத்தன்று அவருக்கு பரிசளித்த தனியார் ஜெட் விமானத்தின் மதிப்பு 13.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

சட்டபூர்வமாக வாங்கப்பட்ட ஜெட்

அவர் ஜெட் விமானத்தை பரிசாக அளித்து ஒரு கடிதத்தையும் அனுப்பியிருந்தார், மேலும் அவர் தனது கடிதத்தில், முன்பு அவருக்கு பரிசளித்த பொருட்களைப் போலல்லாமல், இந்த முறை அவர் பரிசளித்த ஜெட் விமானம் உரிய வரிகளை செலுத்திய பிறகு சட்டபூர்வமாக வாங்கப்பட்ட ஜெட் என்பதால், அதை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றும் கூறியதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version