Home இலங்கை அரசியல் சுமந்திரனின் இரட்டை முகம்: சாணக்கியனுக்காக இரகசியமாய் நகர்த்தப்படும் காய் !

சுமந்திரனின் இரட்டை முகம்: சாணக்கியனுக்காக இரகசியமாய் நகர்த்தப்படும் காய் !

0

 சி.வி.கே சிவஞானத்தை காப்பாற்றுவது போல சுமந்திரன் திட்டமிட்டு நாடகமொன்றை நடத்தி வருவதாக கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவருமான கிளிநொச்சி சிவில் சமூக செயற்பாட்டாளர் ஜீவன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சி.வி.கே சிவஞானத்தை காப்பாற்றுவது போல சுமந்திரன் நடிக்கின்றார்.

சி.வி.கே சிவஞானத்தை ஒரு புறம் பிரச்சினையில் தள்ளிவிட்டு, சிறீதரனிடம் பதவியில் கோரிக்கையை முன்வைப்பார்.

இதனை சிறீதரன் நிராகரிக்கும் பட்சத்தில் கட்சி தலைவராக கிழக்கில் சாணக்கியனை நிறுத்துவதுதான் அவரின் திட்டம்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய தொடர் அரசியல் சந்திப்புக்களின் பிண்ணனி, தமிழ் அரசியல் களம், அடுத்த கட்ட நகர்வு மற்றும் உள்ளூராட்சி ஆட்சியமைப்பு குறித்த பலதரப்பட்ட விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு, 

https://www.youtube.com/embed/vTPpVSLIdzo

NO COMMENTS

Exit mobile version