நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரக்கட்சி யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் படு மோசமாக தோல்வயை சந்திப்பதற்கு சுமந்திரனின்(sumanthiran) எதேச்சதிகார வேட்பாளர் தெரிவே காரணமென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
லங்கா சிறியின் ‘ஊடறுப்பு ’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுமந்திரன் தான் வெல்லவேண்டுமென்பதற்காக தனக்கு ஏற்றால் போல் வேட்பாளர்களை தெரிவு செய்தார்.வடக்கு மாகாணத்தில் தமிழரசுக்கட்சியை அதலபாதாள நிலைக்கு அவர் கொண்டு சென்று விட்டமை எமக்கு மிகவும் கவலையை அளிக்கின்றது.
2010 ஆம் ஆண்டு தேசியப்பட்டியல் மூலம் வந்த அவரது செயற்பாடு படிப்படியாக வளர்ந்து தற்போது ஒரு உச்ச நிலைக்கு சென்றுள்ளது.
கட்சியில் அவரை எவரும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அவரின் செயற்பாடு அமைந்திருக்கின்றது. உண்மையில் இது ஒரு அடாவடித்தனமான செயற்பாடுதான்.
எனவே 75 வருட பாரம்பரியமிக்க கட்சி படுதோல்வியடைவதற்கு முழுக்க முழுக்க சுமந்திரனே காரணமென அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்த மேலும் பலி விடயங்கள் காணொளியில்….
https://www.youtube.com/embed/jdPNMSodWUU