Home இலங்கை அரசியல் ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்த சுமந்திரன்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்த சுமந்திரன்

0

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) யாழ்ப்பாணம் வடமராட்சி குடத்தனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்றையதினம் சனிக்கிழமை இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதித் தேர்வு

காலை 7 மணிமுதல் நாட்டின் ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்காக தமது வாக்குகளைப் மக்கள் பதிவு செய்து வருகின்றனர். 

அந்த வகையில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மக்கள் அமைதியான முறையில் வாக்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

You may like this…. 


Source: https://tamilwin.com/article/sumanthiran-who-voted-for-the-election-1726892940

NO COMMENTS

Exit mobile version