Home இலங்கை அரசியல் குறிவைக்கப்பட்டாரா மனோ கணேசன் ?: நேற்றிரவு நடந்த அதிர்ச்சி சம்பவம்

குறிவைக்கப்பட்டாரா மனோ கணேசன் ?: நேற்றிரவு நடந்த அதிர்ச்சி சம்பவம்

0

கொழும்பில் (Colombo) பிரசார பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனின் (Mano Ganesan) வாகன சாரதி மற்றும் தற்போதைய தனிப்பட்ட பாதுகாவலர் இருவர் மீதும் பாரந்தூக்கி ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (30.10.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது விபத்துக்கு உள்ளான இருவரும் தற்போது கொழும்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இந்நிலையில் விபத்து தொடர்பில் சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்குளிய காவல் நிலைய போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் உடனடியாக பாரந்தூக்கியின் சாரதியை கைது செய்துள்ளனர்.

மேலும், சாரதி பணிபுரியும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், மனோ கணேசனும் அவரின் சக கொழும்பு மாவட்ட வேட்பாளர், லோஷனும் ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து பிரசாரம் செய்து கொண்டிருந்த போதே விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டகுளிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/weightlifter-hit-mano-ganesan-1730332494

NO COMMENTS

Exit mobile version