சன் டிவி
தமிழ் சினிமாவை விட தமிழ் சின்னத்திரை தான் இப்போது ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ளது.
அதிலும் சன் டிவி சீரியல்கள் பற்றி சொல்லவா வேண்டும், அதிக ரசிகர்கள் ரசித்துப் பார்க்கும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
சிங்கப்பெண்ணே, கயல், மூன்று முடிச்சு, மருமகள் என சன் டிவியில் வரும் எல்லா தொடர்களும் பெண்களை மையப்படுத்திய கதையாக தான் உள்ளது.
பிக் பாஸ் ஜூலி வருங்கால கணவர் போட்டோ.. குக் வித் கோமாளி பிரபலம் தான்!
புதிய சீரியல்
இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல் குறித்த தகவல் தான் வந்துள்ளது.
ரேஷ்மா பசுபுலேட்டி நாயகியாக நடிக்க செல்லமே செல்லமே என்ற சீரியல் உருவாகியுள்ளது, இதன் புரொமோக்களும் ஏற்கெனவே வெளியாகிவிட்டது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.
