முஸ்லிம் சமூகத்திற்குள் “சூப்பர் முஸ்லிம்” என்ற ஒரு தீவிரவாத சித்தாந்தம் உருவாக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இது சாதாரண முஸ்லிங்களின் விருப்பம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கை
சூப்பர் முஸ்லிம் என்ற இந்த சித்தாந்தம் ஒரு சிதைந்த தீவிரவாதப் போக்குக்கு இட்டுச் செல்வதாகவும் ஜனாதிபதி அநுர கூறியுள்ளார்.
இதன்படி, அவை தொடர்பான முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
