Home சினிமா விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீடு தமிழ்நாட்டில் இல்லை, வெளிநாட்டில்… வந்த அதிரடி அறிவிப்பு

விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீடு தமிழ்நாட்டில் இல்லை, வெளிநாட்டில்… வந்த அதிரடி அறிவிப்பு

0

ஜனநாயகன்

விஜய் நடிக்க கடைசியாக உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். வரும் ஜனவரி 9ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்யுடன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

சூப்பர் அப்டேட்

இந்த நிலையில் நவம்பர் 21, விஜய்யின் ஜனநாயகன் படத்தின் அப்டேட் ஒன்று இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டார்கள்.

அப்படி என்ன அறிவிப்பு என்றால், ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் நடக்க உள்ளதாம்.

அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ள அப்டேட் இதோ

NO COMMENTS

Exit mobile version