Home இலங்கை அரசியல் வடக்கு – கிழக்கில் அநுரவிற்கான ஆதரவு: கருத்து கணிப்பில் வெளியான தகவல்

வடக்கு – கிழக்கில் அநுரவிற்கான ஆதரவு: கருத்து கணிப்பில் வெளியான தகவல்

0

வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்களின் மிகக்குறைந்தளவான ஆதரவே ஜனாதபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) கிடைக்கப் பெற்றுள்ளதாக கருத்து கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

குறித்த கருத்துக் கணிப்பானது, இலங்கையை அடிப்படையாக கொண்டு செயல்படும் சுகாதார கொள்கைக்கான மையத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வெற்றி பெறுவார் என பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

முன்னிலையில் அநுர

இந்த நிலையில், சுகாதார கொள்கைக்கான மையத்தால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பின் படி, வடக்கு கிழக்கில் மக்களின் ஆதரவு குறைந்தாலும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க சிறிலங்காவின் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்படுவார் என கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளுக்கமைய ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவு அதிகரித்து வந்ததுடன், அனுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஆகியோருக்கு ஓரளவு ஆதரவு கிடைக்கப்பெற்றிருந்தது.

இந்த பின்னணியில், தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு 28 வீத மக்கள் ஆதரவு மற்றும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 36 வீத மக்கள் ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.

ஜனாதிபதி தெரிவு

அத்துடன், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு வழங்கும் 53 வீதமானோர் இளைஞர்கள் என்பதுடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் 43 வீதமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொட்டித்தன்மை அதிகமாக இருக்குமெனவும் இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் சிறிலங்காவின் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட அதிக வாய்ப்பு காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version