Home சினிமா சூப்பர் ஸ்டார் என்றால் எப்போதும் ரஜினிகாந்த் மட்டுமே.. சூர்யா கூறிய அதிரடி பதில்

சூப்பர் ஸ்டார் என்றால் எப்போதும் ரஜினிகாந்த் மட்டுமே.. சூர்யா கூறிய அதிரடி பதில்

0

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் சூர்யா நடித்து வரும் நவம்பர் 14ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் கங்குவா.

10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாக இருக்கும் இப்படத்தில் ஏஐ மூலம் அனைத்து மொழிகளிலும் சூர்யாவின் வாய்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 26ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நட்சத்திரங்கள் திஷா பாட்னி, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். பாலிவுட்டில் தற்போதே படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளை படக்குழுவினர் தொடங்கிவிட்டனர்.

அடி பாதாளத்திற்கு செல்லும் விஜய் டிவி சீரியல்கள்.. கெத்து காட்டு சன் டிவி தொடர்கள். டிஆர்பி விவரம்

அதிரடி பதில் 

இந்நிலையில், புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூர்யாவை, தொகுப்பாளர் சூப்பர் ஸ்டார் என்று சூர்யாவை அடிக்கடி அழைத்துள்ளார்.

அதற்கு சூர்யா ” தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான் அது ரஜினிகாந்த் மட்டுமே” என்று கூறியுள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version