Home சினிமா கங்குவா நஷ்டம்.. ஈடுகட்ட நடிகர் சூர்யா எடுத்த புது முடிவு

கங்குவா நஷ்டம்.. ஈடுகட்ட நடிகர் சூர்யா எடுத்த புது முடிவு

0

நடிகர் சூர்யாவின் கங்குவா படம் கடந்த வருடம் நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டு இருந்தது, ஆனால் ரிலீஸ் ஆன முதல் காட்சிக்கு பிறகு வந்த நெகடிவ் விமர்சனங்கள் பெரிய அளவில் இந்த பட வசூலை பாதித்தது.

படத்தில் அதிகம் சத்தம் இருக்கிறது, முதல் அரை மணி நேர காட்சிகள் மோசமாக இருக்கிறது என பல நெகடிவ் விமர்சனங்கள் வந்தது.

சூர்யா கெரியரில் மிகப்பெரிய பிளாப் இந்த படம் தான் என தற்போதும் பேச்சு இருந்து வருகிறது.

நஷ்டத்தை ஈடுகட்ட சூர்யா முடிவு

இந்நிலையில் கங்குவா படத்தால் பெரிய நஷ்டம் அடைந்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட அடுத்து இரண்டு படங்களை அதே நிறுவனத்திற்கு நடித்து கொடுக்க சூர்யா ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

இருப்பினும் அந்த படங்களின் இயக்குனர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. சூர்யா அடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

NO COMMENTS

Exit mobile version