Home சினிமா சூர்யா கேரியரில் கைவிடப்பட்ட 5 படங்கள் என்னென்ன தெரியுமா.. லிஸ்ட் இதோ

சூர்யா கேரியரில் கைவிடப்பட்ட 5 படங்கள் என்னென்ன தெரியுமா.. லிஸ்ட் இதோ

0

ஒரு படத்தில் நடக்கும் மாற்றங்களால் அந்த படம் கைவிடப்படுவது சினிமாவில் மிக சகஜமான ஒன்றாக தற்போது ஆகிவிட்டது. அந்த வகையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா ட்ராப் செய்த 5 படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே காணலாம்.

ஆசை :

வசந்த் அவர் இயக்கத்தில், ஆசை படத்தில் முதலில் நடிக்க சூர்யாவை தான் கேட்டுள்ளார். ஆனால், அப்போது சூர்யாவுக்கு நடிப்பின் மீது ஆசை இல்லை என்பதால் அந்த படத்தில் அஜித் நடித்துள்ளார்.

இயற்கை:

இப்படத்தின் கதையை முதலில் சூர்யாவிடம் இயக்குனர் கூறியுள்ளார். ஆனால், ரொமான்ஸ் கதைக்களத்தில் அப்போது சூர்யா நடிக்க மறுத்துள்ளார் என கூறப்படுகிறது.

துருவ நட்சத்திரம்:

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்க கமிட்டான திரைப்படம் துருவ நட்சத்திரம். ஒரு வருடம் கடந்தும் இப்படத்தின் முழு கதையை சூர்யாவிடம் சொல்லாத நிலையில், படத்தில் இருந்து விலகி கொண்டார். ஆனால், இன்று வரை இப்படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போகும் படம்.. எது தெரியுமா

அருவா:

சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்கயிருந்தார். ஆனால், சில கருத்து வேறுபாடு காரணமாக இப்படத்தில் இருந்து விலகி விட்டார்.

வணங்கான்:

பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள் சூர்யாவுக்கு உகந்ததாக இருக்காது என கூறி அந்த படத்தில் இருந்து சூர்யா விலகி கொண்டார். தற்போது, அருண் விஜய் நடித்து படம் வெளியாக தயாராகியுள்ளது. 

  

NO COMMENTS

Exit mobile version