Home முக்கியச் செய்திகள் இறுதிப்போட்டிக்கான பயிற்சியை இரத்து செய்த இந்திய அணி: வெளியாகியுள்ள காரணம்

இறுதிப்போட்டிக்கான பயிற்சியை இரத்து செய்த இந்திய அணி: வெளியாகியுள்ள காரணம்

0

ரி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னைய நாளான நேற்றையதினம்(28), இந்திய அணி பயிற்சி ஆட்டங்களை இரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரி20 உலகக் கோப்பையின் ஒன்பதாவது சீசனில் அரையிறுதியில் இந்தியா(India) இங்கிலாந்தை(England) வீழ்த்தியது.

இதன் மூலம்,  இறுதிப் போட்டியில் இன்று தென்ஆபிரிக்காவுடன்(South Africa) மோதவுள்ளது.

பயிற்சி இரத்து

இந்நிலையில், பார்படாஸ் சென்றுள்ள இந்திய அணி பயண மாற்றம் காரணமாக நிர்வாகம் பயிற்சி அமர்வை இரத்து செய்தது.

மேலும், இறுதிப் போட்டிக்கு முன்னதாக பார்படாஸில் எந்த முன் போட்டி பத்திரிகையாளர் சந்திப்பையும் அணி நடத்தாது என்று ஐசிசி குறிப்பிட்டுள்ளது.

இரு அணிகளும் ஒரு முறை கூட தோற்காமல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளமையால் போட்டிக்கு பலத்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.

ரி20 உலககிண்ண இறுதிப்போட்டி இன்று ஜூன் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மேலும்,
மோசமான வானிலை ஆட்டத்தை அச்சுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/t20-world-ind-vs-eng-india-cancel-training-session-1719607287?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version