Home இலங்கை அரசியல் ஒரே சீனா கொள்கை : அநுர அரசின் நிலைப்பாடு வெளியானது

ஒரே சீனா கொள்கை : அநுர அரசின் நிலைப்பாடு வெளியானது

0

  “ஒரே சீனா கொள்கைக்கு” ​​அநுர அரசின்புதிய அமைச்சரவை தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இந்த வார அமைச்சரவைக் கூட்டத்தின் போது வெளிவிவகார அமைச்சர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் சமர்ப்பித்த அறிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு உறுதி செய்யப்பட்டது.

இதன்படி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின்(anura kumara dissanayake) சீன(china) விஜயத்தை முன்னிட்டு, இலங்கை ஒரே சீனா கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என வெளிவிவகார மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சீனாவின் பிரிக்க முடியாத மாகாணமாக தாய்வான்

தாய்வான்(taiwan) தனது பிரதேசத்தில் பிரிக்க முடியாத பகுதியாகக் கருதப்படுவதைக் கொண்டு, சீனா முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே சட்டபூர்வ அரசாங்கமாக சீன மக்கள் குடியரசின் அரசாங்கத்தை அங்கீகரித்து, இந்தக் கொள்கைக்கான தனது வலுவான உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க சீனாவிற்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version