Home இலங்கை அரசியல் தமிழரசுக்கட்சியை உடைத்து தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டம் : சாத்தியமாகுமா நகர்வு..!

தமிழரசுக்கட்சியை உடைத்து தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டம் : சாத்தியமாகுமா நகர்வு..!

0

 அநுர அரசு கொண்டுவரக்கூடிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியை தமிழ்த் தரப்பு ஐக்கியமாக எதிர்கொள்ளும் வகையிலும் தமிழ் மக்கள் பேரவையால் உருவாக்கப்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்னிறுத்திம் தமிழ் கட்சிகளை ஒன்றிணைய அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டு வரப்போகும் புதிய அரசியல் அமைப்பிற்கு முன்னதாக தமிழ் மக்களுக்கான தீர்வு இதுதான் என ஒற்றுமையாக அழுத்தம் திருத்தமாக தமிழர் தரப்பு முன்வைக்கவேண்டுமென கூறுகிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

எனினும் புதிய அரசமைப்பை உருவாக்க மூன்று வருட கால அவகாசம் கேட்கிறது தேசிய மக்கள் சக்தி அரசு.

இந்த நிலையில் முன்னர் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புக்கள் தமிழ்மக்களின் ஆணையின்றியே உருவாக்கப்பட்டதான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.

இவ்வாறான பின்னணியில் கஜேந்திரகுமாரின் அழைப்பு, தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசமைப்பு உருவாக்கம், தமிழர் தரப்பு தீர்வு தொடர்பாக அடுத்து நடக்கப்போவது என்ன என்பது தொடர்பாக ஆராய்கிறது ஐபிசி தமிழ் பார்வைகள்…. 

https://www.youtube.com/embed/nQn7FyaGO5E

NO COMMENTS

Exit mobile version