Home இலங்கை அரசியல் தமிழ்ப் பொதுவேட்பாளரின் நாளைய பயண ஒழுங்கு

தமிழ்ப் பொதுவேட்பாளரின் நாளைய பயண ஒழுங்கு

0

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனின் நாளைய பயண ஒழுங்கு தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, நாளை (24) காலை 10:45 மணிக்கு கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளினுடனான கூட்டம் இடம்பெறவுள்ளது. 

இக்கூட்டம் நல்லூர் சட்டநாதர் ஆலயத்திற்கும் சங்கிலியன் மந்திரி மனைக்கும் அருகாமையில் உள்ள திவ்ய ஜீவன மண்டபத்தில் நடைபெறவுள்ளதுடன் அதில் பொதுவேட்பாளர் கலந்துகொள்ளவுள்ளார்.

தொடர் பிரசாரப்பயணம் 

இதன் பின்னர், பகல் 12:30 மணிக்கு புதுக்குடியிருப்பு – வள்ளிபுனம் பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள மண்டபத்தில் நடத்தப்படவுள்ள பொதுக்கூட்டத்திற்கு செல்லவுள்ளார்.

“நமக்கு நாமே” தொடர் பிரசாரப்பயணம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் (Jaffna) – சக்கோட்டை, கொடிமுனையில் இருந்து ஆரம்பமாகி பொலிகண்டியில் இருந்து ஆரம்பித்து காங்கேசன் துறையில் நிறைவடைந்தது. 

இந்நிலையில், நாளைய தினம் மாலை 3.00 மணிக்கு அத்தொடர் பிரசாரப்பயணம் காங்கேசன்துறையில் இருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணம் நோக்கி நகரவுள்ளதுடன் அப்பயணத்தில் தமிழ்ப் பொதுவேட்பாளர் கலந்து கொள்ளவுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version