Home இலங்கை சமூகம் மன்னாரில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மன்னாரில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

0

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மன்னார் மாவட்ட மகளிர் அமைப்பினரால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. 

நேற்றைய தினம் (18.05.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் கலாசார
மண்டபத்தில் நடைபெற்றது.

கலந்து கொண்டோர் 

இந்நிகழ்வு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிரணித் தலைவி லூக் ஷோபனா அலெக்சாண்டர்
தலைமையில் இடம்பெற்றது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார்
மாவட்ட பொறுப்பாளர் துரைராசா ஜோன்சன், மன்னார் கலையருவி இயக்குனர் அருட்பணி
லக்ஷன் அடிகளார், அருட்பணி அருட்பிரகாசம் அடிகளார், செல்வ நகர் ஸ்ரீ
முத்துமாரியம்மன் கோயில் குருக்கள் பாபு சர்மா மற்றும் பொதுமக்கள் ஆகியோர்
கலந்து கொண்டு இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். 

NO COMMENTS

Exit mobile version