தமிழரசுக் கட்சியினுடைய முன்னாள் அரசியல்வாதிகள் தமிழர்களையும் தமிழ் இளைஞர்களையும் தவறாக வழிநடத்தியிருந்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
இன்றைய (12) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “உலகத் தமிழ் மாநாடு நடந்த காலப்பகுதியில் அவர்களுடைய மேடைப் பேச்சுக்களில் இளைஞர்கள் சிங்கள மக்களுக்கு எதிராக ஆயுதமேந்தி போராட வேண்டும் என்ற கருத்துக்களை தமிழ் மக்களிடையே விதைக்க ஆரம்பித்தனர். அப்போது தான் தமிழ் மக்களுக்குரிய கேவலமான அரசியல் ஒன்று ஆரம்பித்தது.
அந்தக் காலத்தில் இவரை்களை நம்பி எங்களுடைய தமிழ் இளைஞர்கள் 1977 , 1980, 1983 ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு குழு குழக்களாக ஆயுதங்களை தாங்கினர்.
ஆயுதங்களை தாங்கியவர்கள் இந்தியாவிற்கு சென்று பயிற்சிகளை முடித்து வருகின்ற போது அதே தமிழ் அரசியல்வாதிகள் இவ்வாறு சொன்னார்கள்,“நாங்கள் ஒரு பேச்சுக்காக ஆயுதம் ஏந்துமாறு மேடைப் பேச்சுக்களில் சொன்னால் நீங்கள் போய் ஆயுதம் ஏந்துவதா என கேட்டார்கள்“.
இந்த நிலையில் அரசியல் வாதிகள் எங்களுடைய இனத்தின் சாபக்கேடு என ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் நினைத்தார்கள். அன்று நினைத்தது இன்று செம்மணியில் புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்படும் வரை தொடர்கின்றது” என தெரிவித்தார்.
https://www.youtube.com/embed/jHJYMM926ys
