Home இலங்கை அரசியல் தமிழரசுக்கட்சி எம்.பி சிறீதரன் கனடாவிற்கு பயணம்

தமிழரசுக்கட்சி எம்.பி சிறீதரன் கனடாவிற்கு பயணம்

0

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) கனடாவின் (Canada) ஒட்டோவா நோக்கிப் பயணமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனேடிய வெளிவிவகார அமைச்சின் (Global Affairs Canada) அழைப்பில் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பயணத்தின்போது, கனடாவின் வெளிவிவகார அமைச்சின் இந்தோ- பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதியமைச்சர் வெல்டன் எப்பை (Weldon Epp) சந்தித்து உரையாடவுள்ளார்.

தமிழ் மக்களின் நெருக்கடி

இந்தச் சந்திப்பு ஒட்டோவாவில் (Ottawa) உள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, பொறுப்புக்கூறல், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் சமகால அரசியல் சூழல்கள், தமிழ் மக்களின் நெருக்கடிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கனடிய பிரதியமைச்சருடனான சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமுன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் (K. S. Kugathasan) பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் கனடாவில் தங்கியிருக்கவுள்ள சிறீதரன் அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version