Home இலங்கை அரசியல் அரசாங்கத்துடன் இணைய தமிழ் எம்பியின் இரகசிய டீல் அம்பலம்

அரசாங்கத்துடன் இணைய தமிழ் எம்பியின் இரகசிய டீல் அம்பலம்

0

சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைவதற்காக மத்திய
மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இலஞ்சம் பெற்றதாக
தகவல் வெளியாகியுள்ளது.

இலஞ்சமாக மதுபான விற்பனை நிலையங்களுக்கான
இரண்டு உரிமைப் பத்திரங்களை சம்பந்தப்பட்ட தமிழ்
நாடாளுமன்ற உறுப்பினர் பெற்றுக்கொண்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உரிமத்தை கண்டி திகணை பகுதியிலுள்ள இரண்டு
வர்த்தகர்களுக்கு இரண்டு கோடி ரூபாவிற்கு விற்பனை
செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

யாழில் மாணவன் உட்பட இருவர் மயங்கி சரிந்து உயிரிழப்பு!

மதுபான விற்பனை நிலைய இரண்டு உரிமை பத்திரம்

இது தொடர்பான தகவல் பகிரங்கமான பின்னர், திகண
பகுதியிலுள்ள விகாரையின் விகாராதிபதி இரண்டு
வர்த்தகர்களையும் அழைத்து கலந்துரையாடியுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினரே மதுபான நிலையத்திற்கான
உரிமை பத்திரங்களை வழங்கியதாக இந்த வர்த்தகர்கள்
விகாராதிபதியிடம் கூறியுள்ளனர்.

இந்த விடயம் குறித்து விகாராதிபதி, எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாசவிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்
நாடாளுமன்ற உறுப்பினராக வேலுகுமார்
காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சஜித் அணியிலிருந்து விலகுகின்றார் விஜயமுனி! சுயாதீனமாகச் செயற்பட முடிவு

குற்றச்சாட்டை மறுத்த வேலுகுமார் எம்.பி

இந்த நிலையில் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைவதாக
தெரிவித்து இரண்டு மதுபான விற்பனை
நிலையங்களுக்கான அனுமதி பெற்றதாக வெளியான
குற்றச்சாட்டை மத்திய மாகாணத்தை
பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி தமிழ் நாடாளுமன்ற
உறுப்பினரான வேலுகுமார் நிராகரித்துள்ளார்.

சில தரப்பினர் முன்வைக்கும் போலியான
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை தமக்கு
இல்லையெனவும் அவர் ஐ.பி.சி. தமிழ் செய்திகளுக்கு
தெரிவித்தார்.
தன் மீது சேறு பூசும் வகையில் சிர தரப்பினர் ஆதாரமற்ற
வகையில் கருத்துக்களை வெளியிடுவதாக அவர்
கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version