Home இந்தியா தமிழகத்தில் பரபரப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் வீடுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழகத்தில் பரபரப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் வீடுக்கு வெடிகுண்டு மிரட்டல்

0

தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றது.

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடுக்கு இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிடுள்ளன.

இந்நிலையில், அதிகாலையில் முதலமைச்சரின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ளது. இந்நிலையில் அதிகாலை காவல்துறை பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த மின்னஞ்சலில் முதல் அமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து முதலமைச்சரின் வீட்டிற்கு விரைந்த காவல்துறையினர் சோதனை நடத்தினர்.இந்த மின்னச்சல் எதற்காக வந்தது? யார் அனுப்பினார்கள்? என்பது இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில், சைபர் குற்றம் காவல்துறையினர்அந்த அஞ்சல் முகவரியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில், நீலாங்கரை பகுதியில் உள்ள நடிகர் மற்றும் தமிழ் வெற்றி கழகம் (TVK) தலைவர் விஜயின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணொளி – https://youtu.be/nbknzdSpHKQ

NO COMMENTS

Exit mobile version