Home இலங்கை அரசியல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர் தெரிவு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர் தெரிவு

0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவராக குகதாஸை (Kugadhas) நியமிப்பது என
மத்திய குழு தீர்மானம் எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சோ. மாவை
சேனாதிராஜா (S. Mavai Senathirajah) தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் (Jaffna) – மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று (03.07.2024) நடைபெற்ற மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் நினைவேந்தல் நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“திருகோணமலை (Trincomalee) என்னும் பிரதேசத்தில் தமிழர்களுடைய தலைநகரம் நில ஆக்கிரமிப்புக்கு
உள்ளாகி சிங்கள மயமாகி, பெளத்த மதமாகி இருக்கின்ற இந்த கால கட்டத்தில், நிலத்தின் விடுதலைக்காக எங்களின்  கொள்கையினை நிலை நாட்டுவதற்காக உழைத்த  எங்கள் பெரும் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை இழந்திருக்கின்றோம்.

சம்பந்தனின் இறுதிக்கிரியை 

இந்நிலையில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குகதாஸ் அதிவிருப்பு வாக்குகளை பெற்றதன்
காரணமாக அவரை அடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக தெரிவு செய்வதற்கு
மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் இறுதிக்கிரியை எதிர்வரும் 07.07.2024 அன்று இடம்பெற்றதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின்
மத்திய செயற்குழு ஒன்றுகூடி குறித்த வெற்றிடத்திற்கு குகதாஸ் அவர்களை
நியமிப்பது என எண்ணியுள்ளோம்.

மேலும், தேர்தலிலே திருகோணமலை மாவட்டத்தில் மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின்
தலைவர் இரா.சம்பந்தனுக்கு அடுத்த படியாக
கூடுதல் வாக்குகளை குகதாஸ் பெற்றதன் காரணமாகவும் அவரை நியமிப்பது என்று மத்திய
குழு தீர்மானம் எடுக்கும் என நம்புகின்றேன்” என கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version