உள்ளுராட்சி தேர்தலில் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் ஒருங்கிணைத்து
தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சிகள் முன்னெடுத்தாலும் சில தமிழ் கட்சிகள்
தாங்கள்தான் பெரிய கட்சிகள் என்ற தலைக்கணத்தில் ஒற்றுமைக்கு பங்கம்
விளைவித்துள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் கோவிந்தன் கருணாகரம்
தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம்
செலுத்தும் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும்
தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றன.
இன்று(14) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக இம்முறை மட்டக்களப்பு
மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு நகரில் உள்ள தேர்தல் அலுவலத்தில்
கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தலைமையில் இந்த கட்டுப்பணம்
செலுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபை உட்பட 11உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான
கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக கருணாகரம் தெரிவித்துள்ளார்..
இதன்போது மேலும்
கருத்து தெரிவித்த அவர்,
