Home இலங்கை அரசியல் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணியின் (Tamil People’s Council) வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்றைய தினம் (19.10.2024) யாழ்ப்பாணம் (Jaffna) பெருமாள் கோயில் வடக்கு வீதியில் அமைந்துள்ள மண்டமொன்றில் நடைபெற்றுள்ளது.

விஸ்வலிங்கம் மணிவண்ணன் (V. Manivannan) தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணியானது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் (Jaffna) தனித்து போட்டியிடுகிறது.

தமிழ் மக்கள் கூட்டணி

மேலும், தமிழ் மக்கள் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் மான் சின்னத்தில் களமிறங்கியுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியில்
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல்
மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர்
சட்டத்தரணி வி. மணிவண்ணனும், சக வேட்பாளர்களாக வரதராஜன் பார்த்திபன்,
தவச்செல்வம் சிற்பரன், முருகானந்தன் யசிந்தன், கதிரேசன் சஜீதரன், குலேந்திரன்
செல்ரன், அருள்பரன் உமாகரன், நாவலன் கோகிலவாணி மற்றும் மிதிலைச்செல்வி
ஶ்ரீபத்மநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்றையதினம் (18) க.வி.விக்னேஸ்வரனின் (CV Vigneswaran) இல்லத்தில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/tamil-people-s-council-candidate-launch-1729345405

NO COMMENTS

Exit mobile version