Home இலங்கை சமூகம் யாழில் இடம்பெற்ற விபத்தில் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் பலி

யாழில் இடம்பெற்ற விபத்தில் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் பலி

0

யாழில் (jaffna) இடம்பெற்ற விபத்தில் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை (Kayts) பகுதியில் நேற்றைய தினம் (13.9.2024) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

தெல்லிப்பழை காவல் நிலையத்தில் கடமையாற்றும், புங்குடுதீவு பகுதியை சேர்ந்த
கண்ணதாசன் எனும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

காவல்துறை விசாரணை

வேலணை பகுதியில் இருந்து அராலி சந்தியை நோக்கி மோட்டார் சைக்கிளில்
பயணித்துக்கொண்டிருந்த வேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி, எதிரே வந்த
ஜே.சி.பி வாகனத்தினுள் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Source: https://ibctamil.com/article/tamil-police-officer-accident-death-in-jaffna-1726276316

NO COMMENTS

Exit mobile version