Home இலங்கை அரசியல் ஒன்றிணையும் தமிழ் தலைவர்கள்! மீண்டும் 25 ஆம் திகதி முடிவு

ஒன்றிணையும் தமிழ் தலைவர்கள்! மீண்டும் 25 ஆம் திகதி முடிவு

0

நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரனுடனும் செல்வம் அடைக்கலநாதனுடனும் தான் சந்திப்பொன்றை இன்று நடத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, தாங்கள் மூன்று தரப்பினரும் சேர்ந்து சந்திப்பதற்கான ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 25 ஆம் திகதி குறித்த மூன்று கட்சிகளும் பொதுவான ஒரு சந்திப்பை நடத்தவுள்ளதாக கஜேந்திரகுமார் மேலும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும் போது சகல தமிழ்த்தேசியக்கட்சிகளும் கூட்டிணைந்து புதிதாகத் தயாரிக்கப்பட்ட பொதுவான தீர்வுத்திட்டமொன்றை சமர்ப்பிக்கவேண்டும் என கஜேந்திரகுமார் முன்னர் வலியுறுத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் அதன் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் சிறீதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் இன்று சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறும் விடயங்கள் கீழுள்ள காணொளியில்…. 

https://www.youtube.com/embed/81358Z8UgX0

NO COMMENTS

Exit mobile version