அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமூலத்தை தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள பயன்படுத்திவருகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்வேறு முரண்பாடு
யாழ்ப்பாணத்தில் ஓரளவு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ள போதிலும் கிளிநொச்சி, வவுனியா அல்லது முல்லைத்தீவில் வாழும் மக்கள் மிகவும் கஷ்டமான வாழ்கையையே வாழ்கின்றனர்.
அங்குள்ளவர்கள் கல்வி முதல் அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொள்வதில் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.
வடக்கில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. மொழி ரீதியான பிரச்சினை அங்கு உள்ளது.
அரச அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தாம் விரும்பும் மொழியில் தேவைகளை
நிறைவேற்றிக்கொள்ள முடியாதுள்ளது.
கொழும்பை மையப்படுத்தியுள்ள சில வசதி,
வாய்ப்புகள் வடக்குக்குச் செல்வதில்லை.
கடற்றொழிலாளர்களின் நிலை
இந்த மக்கள் மிகவும் வறுமைகைக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். தெற்கில் இருந்து
வடக்குக்குச் செல்லும் பாதை அழகாக உள்ளது. பாதையின் இருபுறங்களிலும் கடைகள்
உள்ளன. ஆனால், பாதையைத் தாண்டி உள்ளே சென்றால் வீடுகள் இல்லை. மக்கள்
வறுமையாகவும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாதும் வாழ்கின்றனர்.
உள்பாதைகள் மிகவும் மோசமான முறையில் புனரமைக்கப்படாது புழுதிகளுடன்
காணப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில் சிலர் வெளிநாடுகளில் இருப்பதால் ஓரளவு பொருளாதாரம் உள்ளது.
ஆனால், வவுனியா அல்லது கிளிநொச்சி சென்றால் அங்கு பொருளாதாரம் இல்லை.
முல்லைத்தீவில் வாழும் கடற்றொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
விவசாயிகள்
உற்பத்தி செய்யும் பழங்களையும், மரக்கறிகளையும் விற்பனை செய்துக்கொள்ள உரிய
சந்தை வாய்ப்புகள் இல்லை. வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவாகும்.
தெற்கில் இருந்து அங்கு சென்று சுற்றுலாவில் நாம் ஈடுபட்டு வருகின்றோம்.
ஆனால், அங்குள்ள மக்களின் வாழ்கை முள்ளின் மேல் உள்ளது’’ என்றார்.