Home இலங்கை அரசியல் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் பொதுக்கூட்டம்

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் பொதுக்கூட்டம்

0

ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு (P. Ariyanethran) ஆதரவு தெரிவித்து நாளை மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. 

இந்த கூட்டமானது, முல்லைத்தீவு (Mullaitivu) – வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் நாளை (18.08.2024) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெறவுள்ளது. 

அதேவேளை, கூட்டத்திற்கு முன்னர் காலை 9 மணிக்கு தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு வணக்கம் செலுத்தவுள்ளார். 

ஊடக சந்திப்பு 

இதனை தொடர்ந்து,  ஊடகச் சந்திப்பும் நடத்தப்படவுள்ளதுடன், கூட்டத்தின் போது தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் உரையாற்றவுள்ளனர். 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழர் அரசியலில் ஒரு திருப்பு முனையாக தமிழ்த் தேசியக் கட்சிகளும், பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து பா.அரியநேத்திரனை தமிழர் தரப்பின் பொதுவேட்பாளராக களமிறக்கியுள்ளன. 

இந்நிலையில், தமிழ் மக்களின் மற்றும் அரசியல் கட்சிகளின் நிலையில் ஒரு பெரும் மாற்றத்தை இந்த தமிழ் பொதுவேட்பாளர் தெரிவு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/tamil-public-candidate-grand-rally-2024-mullaitivu-1723905737

NO COMMENTS

Exit mobile version