Home இலங்கை சமூகம் அகில இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் போட்டியில் தமிழ் மாணவனின் புதிய சாதனை

அகில இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் போட்டியில் தமிழ் மாணவனின் புதிய சாதனை

0

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் மட்டக்களப்பு
மாவட்டம் பட்டிப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய
பாடசாலையைச் சேர்ந்த குகன் பகிர்ஜன் என்ற மாணவன் 16 வயதிற்குட்பட்ட
ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் கலந்து கொண்டு புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

குறித்த போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(12.10.2025) தியகம
மகிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றிருந்தது.

குகன் பகிர்ஜன், அவருடன் போட்டியிட்ட ஏனைய மாணவர்களை வீழ்த்தி 1.98 மீற்றர் உயரம் பாய்ந்து
இலங்கையில் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் புதிய சானையைப்
பதடைத்துள்ளார்.

முதலிடம் 

புதிய சாதனையைப் படைத்து அவர் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாதாக பாடசாலை நிருவாகம் தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version