Home இந்தியா வெளிநாடொன்றில் இரண்டு தமிழர்களுக்கு விதிக்கப்பட்டது சிறை

வெளிநாடொன்றில் இரண்டு தமிழர்களுக்கு விதிக்கப்பட்டது சிறை

0

  சிங்கப்பூரில், பாலியல் தொழிலாளிகளை தாக்கி கொள்ளையடித்த இரண்டு தமிழர்களுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி டைசன், 23, ராஜேந்திரன் மயிலரசன், 27, ஆகிய இருவருக்குமே மேற்படி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

 கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறையை கழிக்க சிங்கப்பூர் சென்றனர். லிட்டில் இந்தியா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர்களை அணுகிய முகம் தெரியாத நபர், பாலியல் தொழில் தொடர்பாக இரண்டு பேரின் கைபேசி எண்ணை கொடுத்து விட்டுச் சென்றார்.

பெண்களிடம் நகை, பணம் கொள்ளை 

இதையடுத்து, இருவரும் அந்த கைபேசிக்கு தொடர்பு கொண்டு பேசி, இரு பெண்களை ஹோட்டல் அறைக்கு வரவழைத்தனர். அறைக்குள் வந்ததும் ஒரு பெண்ணின் கை, கால்களை கட்டி, கடுமையாக தாக்கி, அவரிடம் இருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்தனர்.

மற்றொரு பெண்ணிடம் ரொக்கம், இரண்டு கைபேசிகள் ஆகியவற்றை கொள்ளை அடித்து விட்டு, அங்கிருந்து தலைமறைவாகினர்.

சிறைத்தண்டனை,பிரம்படி

இது தொடர்பாக இரண்டு பெண்களும் அளித்த புகாரில், ஆரோக்கியசாமி, ராஜேந்திரன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இருவருக்கும் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், 12 பிரம்படிகளும் தர நீதிமன்றம் உத்தரவிட்டது. 

NO COMMENTS

Exit mobile version