Home இலங்கை அரசியல் அமிர்தலிங்கத்தின் சிலைக்கு அஞ்சலி செலுத்திய தமிழக அரசியல் தலைவர்

அமிர்தலிங்கத்தின் சிலைக்கு அஞ்சலி செலுத்திய தமிழக அரசியல் தலைவர்

0

முன்னாள் எதிர்க்கட்சி
தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் (A. Amirthalingam) உருவச்சிலைக்கு தமிழக திராவிடர் கழகத்தின்
தலைவர் பி.வீரமணி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் குறித்த அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் தமிழகத்தின், திராவிடர் கழகத்தின் தலைவர் பி.வீரமணி, இலங்கை
தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் அமிர்தலிங்கம் அறக்கட்டளை
உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

மலர்தூவி அஞ்சலி

யாழ்ப்பாணம் – பண்ணாகம், வலிகாமம் – மேற்கு பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள
அமிர்தலிங்கத்தின் உருவச்சிலைக்கு இவ்வாறு மலர்மாலை அணிவித்து மலர்தூவி
அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version