20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான (Sri Lanka) விசா கட்டுப்பாடுகளை தன்சானியா (Tanzania) நீக்க தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த விடயத்தினை, இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கணநாதன் (Gananathan) தெரிவித்துள்ளார்.
அதன்படி, தற்போது, வர்த்தகர்கள் மற்றும் பயணிகள் தன்சானியாவிற்கு இணையம் வழியாக விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.
உயர்மட்ட பேச்சுவார்த்தை
அந்தவகையில், தன்சானிய அரசாங்கத்துடனான விரிவான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் இலங்கை பரிந்துரை விசா பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், தன்சானியா நாட்டு கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் 49 நாடுகளுக்கு விசா இன்றி செல்லமுடியும் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.