Home முக்கியச் செய்திகள் வகுப்பறையில் தலைக்கு எண்ணெய் தேய்த்து அலங்கரித்த ஆசிரியர் : வைரலாகும் அதிர்ச்சி காணொளி

வகுப்பறையில் தலைக்கு எண்ணெய் தேய்த்து அலங்கரித்த ஆசிரியர் : வைரலாகும் அதிர்ச்சி காணொளி

0

இந்தியாவின் (india)உத்தரபிரதேச மாநிலத்தில்(uttar pradesh) மாணவர்கள் முன்னிலையில் வகுப்பறையில் தனது தலைக்கு எண்ணெய் தேய்த்து அலங்கரித்த ஆசிரியர் தொடர்பான காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.

 மாணவர்கள் வகுப்பில் இருக்கும்போது ஆசிரியை தனது தலைமுடிக்கு எண்ணெய் தடவியதுடன், கைபேசியில் கிளாசிக்கல் இசையை ஓடவிட்டும் அதை ரசித்துள்ளார்.

 பெற்றோர்கள் மீதும் தாக்குதல்

மேலும், பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர்களுடன் ஆசிரியை மோசமாக நடந்து கொண்டதுடன்,அவர்களை கம்பியால் அடித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

 இதையடுத்து மாவட்ட அடிப்படை கல்வி அதிகாரி தனிப்பட்ட விசாரணை அலுவலரை நியமித்து விசாரணையைத் தொடக்கியுள்ளார். அதற்குமுன்னர் ஆசிரியை சங்கீதா மிஸ்ரா பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியையின் இவ்வாறான சம்பவம் கல்வித்துறையின் கடுமையான விமர்சனத்தையும், பொதுமக்களின் எதிர்வினைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version