Home உலகம் பங்களாதேஷில் பாடசாலை கட்டிடம் மீது விழுந்து நொருங்கிய விமானம்!

பங்களாதேஷில் பாடசாலை கட்டிடம் மீது விழுந்து நொருங்கிய விமானம்!

0

பங்களாதேஷில் (Bangladesh) அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து இன்று (21) மதியம் 1:30 மணியளவில் இடம்பெற்றதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உத்தரா – டயபாரியில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீதி விமானம் மோதி வெடித்து தீப்பிடித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஒருவர் பலி 

சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விபத்து நடந்த நேரத்தில் மைல்ஸ்டோன் கல்லூரி வளாகத்தில் பல மாணவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version