தங்களது பிள்ளைகளை தாங்கள் பணியாற்றும் பாடசாலைகளில் சேர்ப்பதற்கான வாய்ப்பை மீண்டும் வழங்குமாறு ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னரே போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த போராட்டம் தேசிய பாடசாலைகளில் 3 வருடங்களை பூர்த்தி செய்த கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவு
இப்பிரச்சினையை முன்னிறுத்தி கடந்த சில நாட்களாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இருப்பினும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என தெரிவித்து, குறித்த குழுவினர் கல்வி அமைச்சுக்கு சென்றிருந்தனர்.
பின்னர், கல்வியமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடனான பேச்சுவார்த்தை தோல்வியுற்றதாகக் கூறி கல்வியமைச்சரின் காரியாலயத்துக்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்ததுடன், அவர்களில் சிலருக்கு ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலை நடத்துவதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டது கலந்துரையாடலின் பின்னர் குறித்த உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது.
