Home இலங்கை ஜெனீவாவில் ஒன்று திரண்ட இலங்கை தமிழர்கள்

ஜெனீவாவில் ஒன்று திரண்ட இலங்கை தமிழர்கள்

0

தமிழ் இனப்படுகொலைக்கு நீதி மற்றும் சர்வதேச பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி, நேற்று(15.09.2025) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் பாரிய பேரணி நடத்தப்பட்டுள்ளது.  

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வின் நிகழ்ச்சி நிரலில்
இலங்கை இடம்பெற்றுள்ள நிலையில், இந்த பேரணி நடைபெற்றுள்ளது.

இனப்படுகொலையை நடத்தியதற்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு
பரிந்துரைக்குமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான
தமிழர்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வெளியில் கூடி இந்த பேரணியை
நடத்தியுள்ளனர்.

தியாக தீபம் திலீபன்

முன்னதாக, தியாக தீபம் திலீபன் சாகும் வரை உணவுத்தவிர்ப்பை மேற்கொண்டு 38
ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பேரணியில் பங்கேற்றோர், அவருக்கு அஞ்சலி
செலுத்தியுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version