Home முக்கியச் செய்திகள் நாடளாவிய ரீதியில் கல்வி நடவடிக்கைகள் கடுமையாக பாதிப்பு

நாடளாவிய ரீதியில் கல்வி நடவடிக்கைகள் கடுமையாக பாதிப்பு

0

நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள், அதிபர்கள் முன்னெடுக்கும் சுகவீன விடுமுறைப் போராட்டத்தினால் கல்வி நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் இன்று (09) ஆசிரியர் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சில பாடசாலைகளில் இன்றைய தினம் அதிபர்கள், ஆசிரியர்கள் வருகைதந்துள்ள நிலையில் மாணவர்களின் வரவுகள் குறைவாக காணப்படுகின்றது.

சம்பள அதிகரிப்பு உட்பட கோரிக்கை

பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரியர்களின் வரவின்மை காரணமாக பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்கள் திரும்பிச்சென்றதை காணமுடிந்தது.

பாடசாலைகளுக்கு முச்சக்கர வண்டிகளிலும் பாடசாலை வாகனங்களிலும் வருகைதந்த மாணவர்கள் ஆசிரியர்கள் வருகைதராத காரணத்தினால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதையும் காணமுடிந்தது.  

சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version