Home இலங்கை சமூகம் யாழில் தொடர்ச்சியாக அறுக்கப்படும் தொலைத்தொடர்பு வயர்கள்

யாழில் தொடர்ச்சியாக அறுக்கப்படும் தொலைத்தொடர்பு வயர்கள்

0

யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி கரணவாய் பகுதியில் தொடர்ச்சியாக இலங்கை
தொலைத்தொடர்பு சேவைக்குரிய (srilanka Telecom) வயர்கள் திருடர்களால் அறுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 8 முறைப்பாடுகள் நெல்லியடி பொலிஸ்
நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், இது தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு பாதிப்பு 

இவ்வாறு அரச சொத்தான ஸ்ரீ லங்கா ரெலிகொம் இணைப்பு வயர்கள் அறுக்கப்படுவதனால், அப்பகுதியில் தொலைத்தொடர்பு பாதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், அரச சொத்துக்கள்
நாசமக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படுவதில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version