Home இலங்கை அரசியல் தையிட்டியில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்த திட்டம் : அம்பலமான தகவல்

தையிட்டியில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்த திட்டம் : அம்பலமான தகவல்

0

தையிட்டியில் இடம்பெறும் போராட்டத்தில் பங்குபற்றும் தமிழ் மக்களை தாக்குவதற்கு திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் (Jaffna) தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி இன்று (10.06.2025) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் நேற்று ஆரம்பமான நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்திருந்தது.

இந்தநிலையில், போராட்டம் இடம்பெறும் தையிட்டி பகுதியில் அதிக காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்ததுடன், நீர்த்தாரை பிரயோகத்திற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில், போராட்டத்தில் பங்குபற்றும் தமிழ் மக்களை தாக்குவதற்கு திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும், அது தொடர்பில் தகவல் கிடைத்ததாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 

அத்தோடு, எம்மை யார் பயமுறுத்தினாலும் ஆக்கிரமிப்பிற்கு எதிரான எமது போராட்டம் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது சட்டவிரோதமான ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டம் என்பதனை தென்பகுதி சிங்கள, பௌத்த மக்களுக்கு கூறி வைக்க விரும்புகின்றோம் எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள காணொளியில் காண்க….

https://www.youtube.com/embed/6QChEp-Xt14

NO COMMENTS

Exit mobile version