Home இலங்கை அரசியல் தாஜுதீனின் மரணம் திட்டமிட்ட கொலை! குற்றவாளிகளை அதிர வைத்த ஜனாதிபதி

தாஜுதீனின் மரணம் திட்டமிட்ட கொலை! குற்றவாளிகளை அதிர வைத்த ஜனாதிபதி

0

தாஜுதீனின் மரணம் திட்டமிட்ட கொலை. அது இயற்கையான மரணம் அல்லவென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தாஜுதீனின் கொலை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் கடற்படையின் சில அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும்.

இது இயற்கை விபத்தா? அல்லது கொலையா? விசாரணை அதிகாரிகளும் நீதிமன்றத்தின் உண்மைகளும் இது ஒரு கொலை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த கால குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகள் செய்யும் போது அதில் பாதுகாப்பு படையினரும் விசாரிக்கப்படுவார்கள்.

இதனை காரணமாக கொண்டு இராணுவத்தினருக்கு எதிராக அரசு செயற்படுவதாக விமர்சனம் செய்யாதீர்கள் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

எக்னலிகொட கொலை மற்றும் கடந்த காலத்தில் நடந்த ஈஸ்டர் தாக்குதலை நாம் விசாரிக்க வேண்டும். அது தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது செய்திகளின் தொகுப்பு…

NO COMMENTS

Exit mobile version