Home சினிமா குற்றவுணர்ச்சியால் தான் அந்த படத்தில் நடித்தேன், செய்த தவறு.. அஜித் குமார் உடைத்த ரகசியம்

குற்றவுணர்ச்சியால் தான் அந்த படத்தில் நடித்தேன், செய்த தவறு.. அஜித் குமார் உடைத்த ரகசியம்

0

அஜித் குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்துக்கு பத்மபூஷன் விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உலா வருகின்றனர்.

ரோபோ ஷங்கர் வீட்டில் நடந்த மகிழ்ச்சியான விஷயம்.. இந்திரஜா பகிர்ந்த அழகிய போட்டோஸ்

செய்த தவறு

இந்நிலையில், அஜித் குமார் சுமார் 13 ஆண்டுகளுக்கு பின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது ஏன் என்பது குறித்து பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” நேர்கொண்ட பார்வை படத்திற்கு முன் நான் நடித்த சில படங்கள் என்னை குற்றவுணர்ச்சியடையச் செய்தன. என் சில படங்களில் பெண்களை ஸ்டாக்கிங் செய்வது போன்ற விஷயங்களை ஊக்குவிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றது.

நாங்கள் திரையில் செய்யும் விஷயங்களைத்தான் மக்கள் பின்பற்ற நினைப்பார்கள். நான் முந்தைய திரைப்படங்களில் செய்த தவறுகளைச் சரி செய்வதற்காக தான் ‘பிங்க்’ திரைப்படத்தை ரீமேக் செய்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version