Home உலகம் திடீரென வெடித்து சிதறிய முக்கிய துறைமுகம்: ஈரானுக்கு பேரிழப்பு!!

திடீரென வெடித்து சிதறிய முக்கிய துறைமுகம்: ஈரானுக்கு பேரிழப்பு!!

0

தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸில் உள்ள அந்நாட்டின் முக்கிய துறைமுகமான ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் பாரிய வெடிப்பு சம்பவமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல கொள்கலன்கள் வெடித்ததால் இது ஏற்பட்டதாக மாகாணத்தின் நெருக்கடி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மெஹ்ர்தாத் ஹசன்சாதே உறுதிபடுத்தியுள்ளார்.

வெடிப்புக்கான காரணம் 

இந்த துறைமுகம் முக்கியமாக கொள்கலன் போக்குவரத்தை கையாளுகிறது, மேலும் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் பிற பெட்ரோ கெமிக்கல் வசதிகளை வழங்கும் துறைமுகம் என்றும் அழைக்கப்படுகிறது.

குறித்த வெடி விபத்தினால் துறைமுகம் கணிசமாக சேதமடைந்துள்ளதாகவும் வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணம் ஆபத்தான பொருட்கள் மற்றும் இரசாயனங்களாக இருக்கலாம் என ஈரானிய சுங்க ஆணைக்குழு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

வெடிப்பால் துறைமுகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருவதாகதுடன் மீட்பு பணிகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகின் எண்ணெய் உற்பத்தி

ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து 1000 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள ஷாஹித் ராஜீ, ஈரானின் மிகவும் முன்னேறிய கொள்கலன் துறைமுகமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஹார்மோஸ்கான் மாகாண தலைநகரான பந்தர் அப்பாஸுக்கு மேற்கே 23 கிலோமீட்டர் தொலைவிலும், உலகின் எண்ணெய் உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் ஹார்மோஸ் ஜலசந்திக்கு வடக்கேயும் அமைந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version