தலைவன் தலைவி
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் தலைவன் தலைவி.
இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருந்தனர். மேலும் முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
சிவாங்கி வாங்கிய சொகுசு கார்.. விலை எத்தனை கோடி தெரியுமா
கடந்த மாதம் திரைக்கு வந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் பாக்ஸ் ஆபிசில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது தலைவன் தலைவி.
வசூல்
இந்நிலையில், இதுவரை இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, உலகளவில் இதுவரை தலைவன் தலைவி படம் ரூ. 87.5 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடியை தொட்டு பாக்ஸ் ஆபிசில் சாதனை படைக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
