ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம் வழங்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் குறித்த நியமனம் வழக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பொதுச் செயலாளர்
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார இதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.